வீட்டின் கழிவறையில் மயங்கி விழுந்த கர்ப்பிணி.. குறைப்பிரசவம்: சிறிது நேரத்தில் நேர்ந்த சோகம்

6 மாத கர்ப்பிணியாக இருந்த சங்கரேஸ்வரி வயிற்று வலி காரணமாக கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்தார்.
கர்ப்பிணி பெண் பலி
Published on: 

விருதுநகர்,

வீட்டின் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாய் குழந்தை உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அதிவீரன்பட்டியை சேர்ந்தவர் சங்கரேஸ்வரி (வயது 36). 6 மாத கர்ப்பிணியான இவருக்கு, இன்று காலை வயிற்று வலி அதிகரித்துள்ளது. வயிற்று உபாதையாக இருக்கும் என கருதிய அவர், கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அவருக்கு கழிவறையிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.

குறை மாதத்தில் குழந்தை பிறந்ததால், இருவரையும் மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com