திருவொற்றியூரில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - கணவரிடம் போலீசார் விசாரணை

திருவொற்றியூரில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூரில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - கணவரிடம் போலீசார் விசாரணை
Published on

திருவொற்றியூர் மேற்கு பாலகிருஷ்ணன் நகர் செல்வ விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் கிரேன்குமார். எலக்ட்ரீசியனான இவருடைய மனைவி மணிமேகலை (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் மகன் உள்ளான்.

தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த மணிமேகலைக்கும், கிரேன்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் மனம் உடைந்த கர்ப்பிணியான மணிமேகலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது கணவர் கிரேன்குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com