குடும்ப தகராறில் 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை

கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பெண்ணின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

ஓட்டேரியில் 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

குடும்ப தகராறு

சென்னை ஓட்டேரி புதிய வாழை மாநகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் (29 வயது). இவர், கோகிலா என்ற அஸ்ரா (26 வயது) என்பவரை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். 8 மாத கர்ப்பிணியான கோகிலாவுக்கும், சந்தோசுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கர்ப்பிணி தற்கொலை

நேற்று முன்தினம் கணவருக்கு வீடியோ கால் செய்த கோகிலா, உடனடியாக வீட்டுக்கு வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். இதையடுத்து சந்தோஷ், உடனடியாக வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கோகிலா புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை

இதையடுத்து கோகிலாவின் தாயார் அம்மு, தனது மகளை அவரது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஓட்டேரி போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் கோகிலா, திருமணமாகி ஓராண்டுக்குள் தற்கொலை செய்து கொண்டதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com