846 குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கு வருகிற 1-ந்தேதி முதல்நிலைத் தேர்வு: 4.89 லட்சம் பேர் போட்டி

846 குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கு வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ள முதல்நிலைத் தேர்வை, சென்னையில் மட்டும் 51 ஆயிரத்து 721 பேர் 173 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.
846 குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கு வருகிற 1-ந்தேதி முதல்நிலைத் தேர்வு: 4.89 லட்சம் பேர் போட்டி.
Published on: 

சென்னை,

846 குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கு வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ள முதல்நிலைத் தேர்வை 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் எழுத உள்ளனர்.

846 குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கு வருகிற 1-ந்தேதி முதல்நிலைத் தேர்வு

உதவி ஆய்வாளர், நன்னடத்தை அலுவலர் உள்பட குரூப்-2 பதவிகளுக்கும், தமிழ்நாடு தலைமைச் செயலக உதவியாளர், தொழிற்கூட்டுறவு சங்கங்களின் மேற்பார்வையாளர் உள்பட குரூப்-2 ஏ பதவிகளுக்கும் என 846 பணியிடங்களுக்கான குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான காலி இடங்கள் அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிட்டது. அதன்படி, இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், முதல்நிலைத் தேர்வு வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.

4.89 லட்சம் பேர் போட்டி

இந்த தேர்வை 1 லட்சத்து 84 ஆயிரத்து 131 ஆண்கள், 3 லட்சத்து 5 ஆயிரத்து 719 பெண்கள், 35 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் 1,647 தேர்வு மையங்களில் எழுத இருக்கிறார்கள். அதாவது ஒரு இடத்துக்கு 579 பேர் போட்டியிடுகிறார்கள். சென்னையில் மட்டும் 51 ஆயிரத்து 721 பேர் 173 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com