விருத்தாச்சலம் தொகுதி மக்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி

மக்கள் சேவையே எங்கள் அரசியலின் அடிப்படை நோக்கம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விருத்தாச்சலம் தொகுதி மக்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி
Published on

விருத்தாச்சலம்,

விருத்தாச்சலம் தொகுதி மக்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

விருதாச்சலத்தின் ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று, சட்டமன்றத் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன்.

மக்கள் அளித்த இந்த அன்பும் நம்பிக்கையும் எனக்கு மிகப்பெரிய பொறுப்பை அளித்துள்ளது.

கேப்டன் காட்டிய வழியில், எப்போதும் மக்களோடு இருந்து அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்.

மக்கள் சேவையே எங்கள் அரசியலின் அடிப்படை நோக்கம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com