பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்- அன்புமணி

தாய்மார்களே, பெண்களே, பெற்றோர்களே திமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று அன்புமணி கேட்டுக்கொண்டார்.
பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்- அன்புமணி
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடியில் 2-வது நாளாக எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

விஜயகாந்த் கட்சி தொடங்கியதே திமுகவை எதிர்த்துதான்; அந்தக் கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் இருக்கிறார்; ஆனால், பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்; அதில் சந்தேகமே வேண்டாம். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் எனவும் பிரேமலதா பேசியுள்ளார்.

தமிழகத்தில் தீய திமுக ஆட்சியை அகற்றிவிட்டு அதிமுகவின் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும்; இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள், குழந்தைகளை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. திமுகவின் தோல்விகளும் துரோகங்களும் மோசடிகளும் உலக வரைபடத்தின் பரப்பளவை விட நீளமானவை.

தாய்மார்களே, பெண்களே, பெற்றோர்களே திமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள். ஒரு ஓட்டு கூட திமுகவுக்கு போட கூடாது என தாய்மார்களின் பாதம் தொட்டு கேட்கிறேன். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத திமுக ஆட்சியை தூக்கி வீசுங்கள். தபால் வாக்கு செலுத்திய 90 சதவீதம் பேர் அதிமுகவுக்கு வாக்களித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மக்கள் பேராதரவுடன் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com