பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மோடி நாளை மறுநாள் குமரிக்கு வருவதையொட்டி அகஸ்தீஸ்வரம் கல்லூரி வளாகத்தில் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரிக்கு வருகிறார்.

இதற்காக அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் பிரமாண்டமான முறையில் மேடை மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கான பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை தஞ்சாவூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செய்து வருகிறது. மேடையின் முன்பகுதி சுமார் 200 மீட்டர் அகலத்திலும், பார்வையாளர்கள் அமரும் பந்தல் நான்கு பிரிவுகளாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 25 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் பிரமாண்டமான முறையில் பந்தல் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் தீவிரமாக நடக்கிறது. மோடி வருகையையொட்டி அந்த பகுதி முழுவதும் மத்திய பாதுகாப்பு போலீஸ் படை கட்டுப்பாட்டில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com