தமிழ்நாட்டைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிக்கு தேசிய விருது ஜனாதிபதி வழங்குகிறார்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ‘கபீப்’புக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. #Tamilnadu #TNnews
தமிழ்நாட்டைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிக்கு தேசிய விருது ஜனாதிபதி வழங்குகிறார்
Published on

சென்னை,

சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்காக பாதுகாப்பு நிர்வாகத்தை திறம்பட கவனித்தார் என்ற வகையில், மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பாலில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி கபீப்புக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. தேசிய வாக்காளர் தினமான வருகிற 25ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் இந்த விருதை வழங்குகிறார்.

போலீஸ் அதிகாரி கபீப் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர். இவரது மனைவி மொபினா திருநெல்வேலி சந்திப்பை சேர்ந்தவர்.

போலீஸ் அதிகாரி கபீப் அடையும் அனைத்து சிறப்புகளுக்கும் முக்கிய காரணம் அவரது தாயாரான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை காதர் பீவி. அவரால்தான் கபீப் இந்த நிலைமைக்கு வந்தார் என்று மொபினா, தினத்தந்தி நிருபரிடம் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com