ஜனாதிபதி தேர்தல்: வாக்குப்பெட்டி விமானத்தில் டெல்லி சென்றது

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நேற்று நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்கு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.
ஜனாதிபதி தேர்தல்: வாக்குப்பெட்டி விமானத்தில் டெல்லி சென்றது
Published on

ஆலந்தூர்,

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நேற்று நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்கு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் தமிழக பார்வையாளரான சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் 'சீல்' வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு பெட்டி சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

சென்னையில் இருந்து இரவு 8.30 மணிக்கு டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் முதல் வகுப்பு பயணச்சீட்டு எடுக்கப்பட்டு அதிகாரிகள் அமரும் இருக்கைக்கு பக்கத்திலேயே வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு அதிகாரிகள் பாதுகாப்புடன் டெல்லி கொண்டு செல்லப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட பெட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com