தமிழ்நாட்டில் போதைப்பொருள் வருவதற்கு கடந்த திமுக அரசுதான் காரணம்: அமைச்சர் நிர்மல் குமார்

கடந்த 5 ஆண்டுகளில் உருப்படியான திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் வருவதற்கு கடந்த திமுக அரசுதான் காரணம்: அமைச்சர் நிர்மல் குமார்
Published on: 

சென்னை,

சென்னையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

தமிழ்நாட்டில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வருவதற்கு கடந்த திமுக அரசு தான் காரணம். ஜாபர் சாதிக் என்ற நபர் வந்த பிறகுதான் மெத்தபெட்டமைன் தமிழ்நாட்டில் இவ்வளவு வந்தது. போதைப்பொருள் விவகாரத்தில் யாராக இருந்தாலும் எந்த கட்சியினராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியாக இருந்தால் அது மெத்தபெட்டமைனே இல்லை, கோலப்பொடி என கூறி முடித்திருப்பார்கள். திமுக ஆட்சியில் ராமநாதபுரத்தில் போதைப்பொருள் கிடைத்தபோது அது உரம் என்று கூறி மறைத்தார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. அதிமுகவினர் என்னசெய்தென்று தெரியாமல் தவிப்பில் உள்ளனர். அதிமுக சொத்துக்களை திமுகவிடம் அடகுவைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார்.

முதலமைச்சராக விஜய்யை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியின் முடிவை அதிமுக தலைமை கழகத்தில் உள்ள ஒரு செங்கல் கூட ஏற்றுக்கொள்ளாது.

முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த கோவை பெரியார் அறிவுலகம் அரசு பணத்தில் கட்டப்பட்டது. கோவை பெரியார் அறிவுலகம் திமுகவினருடைய திட்டம் கிடையாது, அரசு பணத்தில் கட்டப்பட்டது. ஸ்டாலின் முதலமைச்சர் என்ற கனவு உலகத்திலேயே இருக்கிறார். பெரியார் அறிவுலகத்தை அவர் கட்டினாரா? இதில் அவரது ஐடியா ஒன்றும் இல்லை. அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் உருப்படியான திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. அப்படியானால், எதற்காகச் சொந்தத் தொகுதியில் தோற்றுப்போனார்?”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com