முன்விரோத தகராறு: தாக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோத தகராறு: தாக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Published on: 

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே முன்விரோத தகராறில் தாக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்விரோதம்

தியாகதுருகம் அருகே உள்ள அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை மகன் வினோத்குமார்(வயது 17). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (54) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

சரமாரி தாக்குதல்

கடந்த 3-ந் தேதி குணசேகரன், அய்யப்பன் மகன் வெங்கடேசன்(27) ஆகியோர் வினோத்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த வினோத்குமார், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கொலை முயற்சி பிரிவின் கீழ் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், குணசேகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் வினோத்குமார் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X