வாலிபால் விளையாட்டின்போது நடந்த தகராறில் முன்விரோதம்.. வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாலிபால் விளையாட்டின்போது நடந்த தகராறில் முன்விரோதம்.. வாலிபர் மீது சரமாரி தாக்குதல்
Published on

விக்கிரவாண்டி,

வாலிபால் விளையாட்டின்போது நடந்த தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் சரமாரியாக வெட்டிச்சென்ற 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்விரோதம்

ராஜசேகர் (வயது 24). இவர் தற்போது ராதாபுரத்தில் உள்ள தனது அக்கா வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடந்த வாலிபால் விளையாட்டு போட்டியில் ராஜசேகருக்கும், ஆர்.சி.மேலகொந்தையை சேர்ந்த நவீன் (22) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

தீவிர சிகிச்சை

இந்த முன்விரோதம் காரணமாக நேற்று ராதாபுரத்திற்கு நவீன் தனது நண்பர்கள் 10 பேருடன் வந்துள்ளார். அப்போது அவர்கள் ராதாபுரம் கருமாரப்பேட்டை பகுதியில் நின்றுகொண்டிருந்த ராஜசேகரிடம் தகராறில் ஈடுபட்டதோடு, அவரை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆர்.சி.மேலகொந்தையை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, தலைமறைவாக உள்ள 9 பேரை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com