தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு

தமிழகத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆகஸ்ட் 31-ந்தேதி(இன்று) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு
Published on

சென்னை,

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப ரூ.85 முதல் ரூ.470 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணமானது ஆண்டுதோறும் இருமுறை, ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெவ்வேறு சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 29 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. குறிப்பாக பரனூர், வானகரம், செங்குன்றம், பட்டரைப்பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் மீதம் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆகஸ்ட் 31-ந்தேதி(இன்று) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. குறிப்பாக மதுரை, திண்டுக்கல், திருச்சி, மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி, எலியார்பத்தி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகிறது.

இதன்படி ஒருமுறை கட்டணம் ரூ.5 முதல் ரூ.45 வரையிலும், இருமுறை கட்டணம் ரூ.10 முதல் ரூ.65 வரையிலும் உயர்கிறது. இதே போல் மாதாந்திர கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com