வருவாய் அதிகரிப்பதால் விலைவாசி உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது- அமைச்சர் செஞ்சி மஸ்தான்

வருவாய் அதிகரிப்பதால் விலைவாசி உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது- என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்
வருவாய் அதிகரிப்பதால் விலைவாசி உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது- அமைச்சர் செஞ்சி மஸ்தான்
Published on

சென்னை,

விலைவாசி உயர்வு மக்களை பாதிக்காது என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார் .இது குறித்து தந்திடிவிக்கு பேட்டி அளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில் ,

மக்கள் மத்தியில் , ஏழைகள் மத்தியில் பணப்புழக்கத்தை கொண்டு வந்துவிட்டோம் .எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது.மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்து இருக்கிறது.அதன் அடிப்படையில் விலைவாசி ஏறுகின்ற நேரத்தில் மக்கள் சிரமப்படுவது போல் இல்லை .

 அதற்கு ஏற்ற வருவாய் கூடுதலாக கிடைக்கிறது. வருவாய் கூடுதலாக வருவதால் ஓரளவு சரிசெய்ய முடிகிறது. தக்காளி என்பது சீசன் உணவுப்பொருள். ஏற்ற இறக்கம் எல்லாம் 10 நாட்கள்தான் இருக்கும். அதைக்கூட கட்டுப்படுத்தத்தான் ரேசன் கடைகளில் தக்காளியை விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com