பின்னலாடை தயாரிப்பு நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு

ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு ரூ.74 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது.
நூல்
Published on

திருப்பூர்,

திருப்பூரில் பின்னலாடை தயாரிப்புக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில்துறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சு விலை உயர்வு

பருத்தி விலை அதிகரிப்பு காரணமாக பஞ்சு விலை உயர்ந்துள்ளது. ரூ.60 ஆயிரமாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, ரூ.74 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது. அதேபோல், பின்னலாடை தயாரிப்புக்கான நூலும் கிலோவுக்கு ரூ.7 அதிகரித்துள்ளது.

10-ம் நம்பர் கோல்டு நூல் கிலோ ரூ.265-க்கும் 16-ம் நம்பர் நூல் கிலோ ரூ.274-க்கும், 20ஆம் நம்பர் கோல்டு நூல் ரூ.333-க்கும் 40-ம் நம்பர் நூல் கிலோ ரூ.383-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com