மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு... தூத்துக்குடியில் குவிந்த மீன் பிரியர்கள்

பெரிய அளவிலான மீன்களை அதிகம் கொண்டு வந்தனர்.
மீன்கள்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. எனவே பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென்றனர்.

பெரிய மீன்கள்

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான நாட்டு படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.

கரைக்கு திரும்பிய மீனவர்களுக்கு மீன்பாடு நன்றாக இருந்ததால் அவர்கள் பெரிய அளவிலான மீன்களை அதிகம் கொண்டு வந்தனர். இதனால் தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அதிகளவில் மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது.

விலை குறைந்தது

மீன்கள் வரத்து அதிகம் காணப்பட்டதாலும், தசரா திருவிழா தொடங்கியதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவிற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வருவதாலும் நேற்று குறைந்த அளவு பொதுமக்களை மீன்கள் வாங்க வந்திருந்தனர். இதனால் மீன்கள் விலையும் சற்று குறைந்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று சீலா மீன் கிலோ ரூ.1000 வரையும், விளை மீன் கிலோ ரூ.600 வரையும், பாறை மீன் கிலோ ரூ.350 வரையும், ஊளி மீன் கிலோ ரூ.400 வரையும், நண்டு கிலோ ரூ.700 வரையும்

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை குறைந்து வருவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்து ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதுபோல் மீன்பாடு நன்றாக இருப்பதால் மீனவர்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com