இம்மாத இறுதியில் மீண்டும் ஏ.சி., செல்போன், பிரிட்ஜ், டி.வி. விலை உயருகிறது

மார்ச் இறுதி முதல் ஏப்ரல் முதல் வாரம் வரையிலான காலக்கட்டத்தில் சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் தொடர்புடைய மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
இம்மாத இறுதியில் மீண்டும் ஏ.சி., செல்போன், பிரிட்ஜ், டி.வி. விலை உயருகிறது
Published on

சென்னை,

மெமரி சிப், கச்சா எண்ணெய்யில் இருந்து பெறப்படும் பிளாஸ்டிக் முதலிய மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, ஏ.சி., செல்போன், பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டி.வி. ஆகியவற்றின் விலை கடந்த 4 மாதங்களில் 3 முறை அதிகரித்துள்ளது. இம்மாத இறுதியில் 4-வது முறையாக மீண்டும் அதிகரிக்க இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு, பல்வேறு நுகர்வு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டது. இதையடுத்து, வீட்டு உபயோக பொருட்களுக்கான தேவை அதிகரித்தது.

இந்த நிலையில் மூலப்பொருள் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, ஏ.சி.க்கான மின் சேமிப்பு விதிகளில் மாற்றம் ஆகியவற்றால் ஜனவரி இறுதி முதல் பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் இவற்றின் விலை அதிகரித்தது.

மார்ச் இறுதி முதல் ஏப்ரல் முதல் வாரம் வரையிலான காலக்கட்டத்தில் சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் தொடர்புடைய மூலப்பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றின் எதிரொலியாக 2-வது சுற்று விலை உயர்வு நடைமுறைக்கு வந்தது. அந்த வகையில்தான் தற்போது 4-வது முறையாக விலை அதிகரிக்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com