பரிகார பூஜை செய்வதாக கூறி விவசாயியை கத்தியால் குத்திய சாமியார் கைது

சாமியார் சிவகுமார், நாகராஜிடம் தனக்கு மதுபானம் வாங்கி வருமாறு தெரிவித்து பணம் கொடுத்தார்.
பரிகார பூஜை செய்வதாக கூறி விவசாயியை கத்தியால் குத்திய சாமியார் கைது
Published on

நீலகிரி ,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது54). சாமியாரான இவர் தனது வீட்டிற்குள்ளேயே சாமி சிலை ஒன்றை வைத்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார். இந்த பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ்(40). இவர் காய்கறி விவசாயம் செய்து வருகிறார்.

நாகராஜ், சிவகுமாருக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். நேற்றிரவு நாகராஜ் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சாமியார் சிவகுமார், நாகராஜிடம் தனக்கு மதுபானம் வாங்கி வருமாறு தெரிவித்து பணம் கொடுத்தார். இதையடுத்து நாகராஜ் மது வாங்கி வந்து சாமியாருக்கு கொடுத்தார். அப்போது சிவக்குமார், நாகராஜிடம் உனக்கு மனநிலை சரியில்லை என வெளியில் பேசுகிறார்கள். எனது வீட்டில் வைத்து உனக்கு ஒரு பரிகார பூஜை செய்கிறேன். அந்த பூஜை செய்தால் உனக்கு எல்லாம் சரியாகிவிடும் என தெரிவித்தார். இதனை நாகராஜும் நம்பி பூஜைக்கு சம்மதம் தெரிவித்தார்.

சாமியார் சிவக்குமார் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டு நாகராஜை தனது வீட்டிற்கு அழைத்தார். நாகராஜ் அங்கு சென்றதும் பூஜைகளை தொடங்கினார். பூஜையின் போது திருநீர் மற்றும் குங்குமம் ஆகியவற்றை நாகராஜின் மீது வீசினார். திடீரென அங்கு வைத்திருந்த கத்தியை எடுத்து நாகராஜின் தலை மற்றும் நெற்றியில் குத்தினார். வலி தாங்க முடியாத அவர் அலறியடித்தபடி அங்கிருந்து வெளியே ஓடிவந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தி னர் காயம் அடைந்த நாகராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். போலி சாமியார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com