மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்க்கும் பிரதமரும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும்: திருமாவளவன் எம்.பி.

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்க்கும் பிரதமரும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும்: திருமாவளவன் எம்.பி.
Published on

மதுரை,

மணிப்பூர் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதுரை அண்ணாநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், மணிப்பூரின் மலைப்பகுதிகளில் உள்ள கனிம வளங்களை சுரண்டவே கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றும், மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com