‘முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் போராட்டம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’ - மா.சுப்பிரமணியன்

மத்திய அரசுடன் இணைந்தவர்களுக்கு மக்கள் உணர்வு புரியாது என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
‘முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் போராட்டம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’ - மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சியினர் மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை சைதாபேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளார் மா.மாசுப்பிரமணியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்திற்கு நடுவே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதிலும் எல்லோருடைய கவனமும் வாக்கு சேகரிக்கும் பணியில் இருக்கிறபோது, தமிழ்நாட்டின் உரிமைகள், குறிப்பாக தென்னிந்தியாவின் உரிமைகள் பறிபோய் விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைக்கு ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்.

இந்த போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை மந்திரி பேசியும் இருக்கிறார். தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த போராட்டம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசுடன் இணைந்தவர்களுக்கு மக்கள் உணர்வு புரியாது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com