முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது அந்த மாநிலத்தின் விஷயம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது அந்த மாநிலத்தின் விஷயம் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது அந்த மாநிலத்தின் விஷயம்
Published on

அரியலூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமையும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாக கேட்கிறீர்கள். அது அந்த மாநிலத்தின் விஷயம். நாம் நமது விஷயத்தை பற்றி பேசுவோம். மோடியை அப்புறப்படுத்துவோம். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதால் மழையின்போது பெரும் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

திராவிட மாடல் என்பது குறித்து தமிழிசை கூறியது மிக பழைய செய்தி. மொழிப்பற்று என்பது வேறு. மொழி மீது அவரவருக்கு இயல்பாக பற்றுதல் உள்ளது. எந்த தூய மொழியையும் தற்போது உலகத்தில் காண முடியாது. ஆங்கிலம், தமிழ் போன்றவை கடந்த 10-ம் நூற்றாண்டில் உள்ளது போன்றா தற்போது உள்ளது?

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com