

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று மாலை 5.45 மணிக்கு கோவை விமானநிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து ஜீப்பில் அவிநாசி சாலையில் ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.
பின்னர் கொடிசியா மைதானம் வந்தடைகிறார். பிரதமர் ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக சுமார் 3 கி.மீ தூரத்துக்கு பொதுமக்கள் பிரதமரை வரவேற்கும் விதமாக சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி தொகுதிகளின் தே.ஜ. கூட்டணியை சேர்ந்த 21 வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். கூட்டத்தை முடித்துக்கொண்டு கோவை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி இரவு 7.30 மணிக்கு தனி விமானத்தில் மேற்கு வங்கம் புறப்பட்டு செல்கிறார்