

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
12 ஆண்டுகள் குஜராத் முதல்வராகவும், தொடர்ச்சியாக மூன்று முறை இந்திய தேசத்தின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றோடு 8,931 நாட்களுக்கு மேல் அரசாங்கத்தைத் தலைமை ஏற்று நடத்தி மிக நீண்ட காலம் அரசாங்கத்தை வழிநடத்திய இந்தியர் எனும் புதிய சாதனையைப் படைத்துள்ளார் நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள்!
எந்தவொரு அரசியல் பின்னணியுமின்றி எளிய குடும்பத்தில் பிறந்து, தேச நலன் ஒன்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, முழுமூச்சாக அயராது தேசத்தின் வளர்ச்சிக்காக நமது பாரதப் பிரதமர் செயலாற்றும் ஒவ்வொரு நாளும், முன்னேற்றத்தின் பாதையில் இந்தியா ஒரு புதிய அடியை எடுத்து வைக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது! எனவே, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமை இன்னும் பல்லாண்டு காலம் தொடரட்டும்!
பாஜக தலைமையிலான மத்திய அரசின் கீழ் பாரதம் மேன்மேலும் வளரட்டும்!. என தெரிவித்துள்ளார்.