காளைகளை காட்சிப் பட்டியலிலிருந்து நீக்க அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் பிரதமர் மோடிக்கு, சசிகலா கடிதம்

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
காளைகளை காட்சிப் பட்டியலிலிருந்து நீக்க அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் பிரதமர் மோடிக்கு, சசிகலா கடிதம்
Published on


தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர கோரி துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் அனில் மாதவ் தவேவை டெல்லியில் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும், இந்த வார இறுதியில் பொங்கல் நடக்க உள்ளதால் அவசரச் சட்டம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், காளைகளை காட்சிப் பட்டியலிலிருந்து நீக்க அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், தமிழக பாரம்பரிய கலாசாரத்தை காக்க ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com