நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாக பிரதமர் கூறுவது பொய் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாக பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாக பிரதமர் கூறுவது பொய் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் எந்த மக்களுக்கு அவர் நிதியைக் கொடுத்தார்? பேரிடரில் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?

ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் முறையாக வந்து சேர வேண்டும் என நினைத்து நாங்கள் நலத்திட்டங்களைத் தீட்டுகிறோம். அதனை உறுதி செய்து செம்மைப்படுத்தத்தான் நீங்கள் நலமா திட்டம்.என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com