பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்

பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்
பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்
Published on

விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 12-ந் தேதி விருதுநகர்அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் பதிவு பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஐ.டி.ஐ. பயிற்சியில் தேர்ச்சி பெற்ற இதுவரை தொழில் பழகுனர் பயிற்சி பெறாதவர்கள் இந்த முகாமில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் பயிற்சி காலத்தில் உதவி தொகையாக மாதத்திற்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com