பிரதமருக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படை இயக்குனர் மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பிரதமருக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படை இயக்குனர் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
பிரதமருக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படை இயக்குனர் மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை,

பிரதமருக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படை இயக்குனர் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

பிரதமருக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படையின் (SPG) இயக்குனர் அருண் குமார் சின்ஹா உடல்நிலைக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com