பிரதமர் தமிழகம் வருகை: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை உறுதி செய்யும்- எல்.முருகன்


பிரதமர் தமிழகம் வருகை: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை உறுதி செய்யும்- எல்.முருகன்
x

பிரதமர் நநேந்திர மோடி வருகிற 23ம் தேதி தமிழகம் வர உள்ளார். அவர் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

சென்னை

பா.ஜ.க. மத்திய மந்திரி எல்.முருகன் சென்னையில் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நமது பாரத பிரதமர் நநேந்திர மோடி வருகிற 23ம் தேதி தமிழகம் வர உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் நமது பிரதமர் நநேந்திர மோடி உரையாற்ற உள்ளார். அதற்கான ஏற்பாடுகள், தயாரிப்புகள் நடைபெற்று வருகிறது. பிரதமரின் வருகை தேசிய ஜனநயாக கூட்டணி ஆட்சி உறுதி செய்யப்படுகின்ற வருகையாக இருக்கும். தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புகின்ற கூட்டமாக அது இருக்கும்.

மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. ஒரு மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. மும்பை மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த மகாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தென்னிந்தியாவில் முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஒரு மிகப்பெரிய அளவிலான வெற்றியை பா.ஜ.க. பெற்றுள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநயாக கூட்டணியின் ஆட்சி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த தினம். எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர், அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 5 வாக்குறுதிகளை தமிழக வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளார். அதை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். மகாராஷ்டிரா மற்றும் திருவனந்தபுரம் உள்ளாட்சி தேர்தல்களில் பெற்ற பா.ஜ.க.வின் வெற்றியானது தமிழகத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான நாளும், நேரமும் குறிக்கப்பட்டுள்ளது. பிரமதரின் வருகையை நாங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான வேலைகளை தொடங்கி செய்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story