சேலம் மத்திய சிறையில் பரபரப்பு: டியூப்லைட்டை தின்று கைதி தற்கொலை முயற்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை

சேலம் மத்திய சிறையில் டியூப்லைட்டை தின்று தற்கொலைக்கு முயன்ற கைதிக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மத்திய சிறையில் பரபரப்பு: டியூப்லைட்டை தின்று கைதி தற்கொலை முயற்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை
Published on

சேலம், 

வழிப்பறி வழக்கு

ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 28). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வழிப்பறி வழக்கில் மகுடஞ்சாவடி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் சிறையில் 7-வது பிளாக்கில் உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று காலை நரேஷ்குமார் திடீரென தனது அறையில் இருந்த டியூப்லைட்டை உடைத்து அதை தின்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதையடுத்து அவரை அதிகாரிகள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நரேஷ்குமாருக்கு போலீஸ் பாதுகாப்புடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.மேலும் இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் நரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தன் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துவிட்டதாக கூறினார். சிறையில் டியூப்லைட்டை தின்று கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பைஏற் படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com