கைதி சாவு

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கைதி இறந்தார்
கைதி சாவு
Published on

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 73). இவரை பசுவந்தனை போலீசார் கடந்த மே மாதம் போக்சோ சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் இழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை சிறை ஜெயிலர் வினோத் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com