புழல் ஜெயிலில் சிறை காவலருக்கு கொலை மிரட்டல் - கைதி மீது போலீசில் புகார்

புழல் ஜெயிலில் சிறை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைதி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
புழல் ஜெயிலில் சிறை காவலருக்கு கொலை மிரட்டல் - கைதி மீது போலீசில் புகார்
Published on

புழல் விசாரணை ஜெயிலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு அறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை தினந்தோறும் வரிசையாக நிறுத்தி கணக்கெடுப்பு பணியில் சிறை காவலர்கள் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று விசாரணை ஜெயில் அறையில் உள்ள கைதிகளை வரிசையாக வரச்சொல்லி சிறைக்காவலர் வடிவேல் கேட்டுக்கொண்டார். அதன்படி சிறையில் உள்ள கைதிகள் வரத்தொடங்கியதும்,

அங்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்று கொண்டிருந்த போது, கைதி ஒருவர் வரிசையில் நிற்பதற்கு மறுப்பு தெரிவித்து சிறை காவலர் வடிவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

உடனே சிறைக்காவலர் இதுகுறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில், மிரட்டல் விடுத்த கைதி புழல் திருநீலகண்டநகரை சேர்ந்த மணிகண்டன் வயது (30) என்பதும், இவர் கடந்த ஆண்டு 160 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் ராயபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் பற்றி சிறை அலுவலர் ராஜசேகரன் புழல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com