தேனியில் தப்பியோடிய சிறைக் கைதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் - எல். முருகன் வலியுறுத்தல்

தமிழக சிறைச்சாலைகளில் போதிய எண்ணிக்கையில் காவலர்கள் பணி செய்கிறார்களா?" என்று எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேனியில் தப்பியோடிய சிறைக் கைதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் - எல். முருகன் வலியுறுத்தல்
எல்.முருகன்
Published on: 

சென்னை,

தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்: தமிழக சிறைகளின் பாதுகாப்பு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி, தப்பியோடிய கைதிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய இணை மந்திரி எல். முருகன் வலியுறுத்தல். இது குறித்து எல். முருகன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழக சிறைகளை ஆய்வு

தேனியில் தப்பியோடிய சிறை கைதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்…! தமிழக சிறைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்...! தவெக அரசு நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்…!

17 சிறை கைதிகள்

தேனி மாவட்டம், தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் காவலர்களை தாக்கிவிட்டு 17 சிறை கைதிகள் தப்பியோடிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. புழல் சிறையில் 2 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் அண்மையில் நடந்தது.

அரங்கேறி இருக்காது

அச்சம்பவத்திலிருந்து தவெக அரசும், அதிகாரிகளும் பாடம் கற்றுக்கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தால் மீண்டும் சிறை கைதிகள் தப்பியோடும் சம்பவம் அரங்கேறி இருக்காது.

ஆய்வு செய்ய வேண்டும்

தமிழகத்தில் ஏற்கனவே சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகள் பெரிய அளவில் தலை தூக்கி இருக்கும் நிலையில் தற்போது தேனியில் 17 சிறை கைதிகள் தப்பிய சம்பவம் பல கேள்விகளை எழுப்புகின்றன. தமிழகத்தில் சிறை நிர்வாகம் சீர்கெட்டு இருப்பதையே இந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. காவலர்களையே தாக்கிவிட்டு கைதிகள் தப்பியோடும் அளவிற்கு சிறைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் நிலவுகிறதா என்பதை தவெக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

கவலைக்குரியது

நமது நாட்டில் 1990களுக்கு முன்பு சிறை கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் சாதாரணமாக இருந்தன. ஆனால் நவீன தொழில்நுட்பமும், மிகச் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளும் பயன்பாட்டிற்கு வந்த பிறகு சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடுவது மிகவும் கவலைக்குரியதாகவே பார்க்கப்படும்.

கேள்விகள் மனதில் எழுகின்றன

தமிழக சிறைச்சாலைகளில் போதிய எண்ணிக்கையில் காவலர்கள் பணி செய்கிறார்களா? கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட கண்காணிப்புக்கான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா? உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்கிறார்களா? என்ற கேள்விகள் மனதில் எழுகின்றன.

வலியுறுத்தல்

எனவே தப்பியோடிய கைதிகள் அனைவரையும் விரைந்து கண்டறிந்து மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும். தவெக அரசு உடனடியாக நிர்வாகத்தில் முழு கவனமும் செலுத்த வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com