தனியார் வங்கி ஊழியர் தற்கொலை

பெரியகுளம் அருகே வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் வங்கி ஊழியர் தற்கொலை
Published on

பெரியகுளம் அருகே உள்ள அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (வயது 26). தனியார் வங்கி ஊழியர். இவர், கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவருடைய தாய் அன்புமணி அருகில் உள்ள தம்பி வீட்டிற்கு சென்று விட்டார்.

பின்னர் மறுநாள் காலையில் அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பாலசுப்ரமணி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாலசுப்ரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலசுப்ரமணி தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com