

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியில், குழந்தைகளை இறக்கி விடுவதற்காக சாலையோரம் நின்றிருந்த பள்ளி வேன் மீது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 6 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த குழந்தைகளை உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார்.
இதையடுத்து, தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதாக குற்றம்சாட்டி, ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோரும், பொதுமக்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.