சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 35 பேர் படுகாயம்!

பேருந்து கவிழ்ந்ததால் அதில் இருந்த பயணிகள் பலத்த காயமடைந்து அவதிக்குள்ளாகினர்.
சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 35 பேர் படுகாயம்!
Published on: 

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி - திண்டிவனம் சாலையில் தனியார் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 35 பேர் படுகாயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி - திண்டிவனம் சாலையில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் எதிரே சில நபர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீது பேருந்து மோதுவதைத் தவிர்க்கும் வகையில் ஓட்டுநர் பேருந்தைத் திருப்பியுள்ளார்.

இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. திடீரென நிகழ்ந்த இந்த விபத்தால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அலறினர். பேருந்து கவிழ்ந்ததால் அதில் இருந்த பயணிகள் பலத்த காயமடைந்து அவதிக்குள்ளாகினர்.

35 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 35 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து செய்தியறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து 35 பேர் படுகாயமடைந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

X