தனியார் பயிற்சி மைய மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தனியார் பயிற்சி மைய மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தனியார் பயிற்சி மைய மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Published on

சமயபுரம்:

சிறுகனூர் அருகே கொணலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியார் நிறுவனம் ஒன்று போலீஸ், ராணுவம் மற்றும் கடற்படை வேலைக்கான பயிற்சி மையம் நடத்தி வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பயிற்சி பெற்று வருகின்றனர். அங்கேயே தங்கியிருந்து பயிற்சி பெறும் சுமார் 50 மாணவிகள் உள்பட 350-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தங்குமிடம், கழிவறை வசதி போதுமானதாக இல்லை என்றும், மேலும் தரமான உணவு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் நேற்றிரவு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த நிறுவனம் விரைவில் உரிய ஏற்பாடுகள் செய்து தருவதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com