புதிய எம்.பி.பி.எஸ். இடங்களில் தனியார் கல்லூரிகளின் ஆதிக்கம் அதிகரிப்பு

எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
புதிய எம்.பி.பி.எஸ். இடங்களில் தனியார் கல்லூரிகளின் ஆதிக்கம் அதிகரிப்பு
Published on

சென்னை,

எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை ஒட்டுமொத்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த நிலையில் தற்போது அவ்வாறு உயர்த்தப்பட்டு வரும் இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சதவீதம் குறைந்து வருவதாக ஒரு புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகிறது. அதன்படி, 2023-ல் 1 லட்சத்து 7 ஆயிரத்து 948 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்தது. அதில் அரசு கல்லூரிகளில் 52 சதவீதமும், தனியார் மற்றும் நிகர்நிலை கல்லூரிகளில் 48 சதவீதமும் இடங்கள் இருந்தன.

தனியார் கல்லூரிகளின் ஆதிக்கம்

2024-ல் 1 லட்சத்து 17 ஆயிரத்து 750 இடங்கள் இருந்த நிலையில், அரசு கல்லூரிகளில் 51 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 49 சதவீதமும் இருந்தன. 2025-ல் 1 லட்சத்து 23 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்த சூழலில், அரசு கல்லூரிகளில் 51 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 49 சதவீதமும் என இருந்தன. 2026-ல் 1 லட்சத்து 36 ஆயிரத்து 939 இடங்களாக உயர்ந்திருந்த நிலையிலும், அரசு கல்லூரிகளில் 46 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் 54 சதவீதமும் என உள்ளன.அதாவது. ஒட்டுமொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரித்தாலும் அதில் தனியார் கல்லூரிகளின் ஆதிக்கமே இருக்கிறது. புதிய எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படுவதில் அரசுத்துறையைவிட தனியார் துறை மிகவேகமாக செயல்பட்டுள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com