லாரி மீது மொபட் மோதல்:தனியார் நிறுவன ஊழியர் பலி

லாரி மீது மொபட் மோதல்:தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

நாமக்கல் சின்னமுதலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது50). இவர் வள்ளிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வந்தார். நேற்று காலையில் வேலைக்கு மொபட்டில் பூங்கா சாலை வழியாக சென்று கொண்டு இருந்தார்.

சந்தைபேட்டைபுதூர் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டு இருந்த லாரியின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய ரமேஷ்குமார், லாரியின் பின்புறத்தில் மோதினார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இந்த விபத்து குறித்து அவரது மனைவி சாந்தி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com