ஆம்னி பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு

ஆம்னி பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
ஆம்னி பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
Published on

தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் மாரிராஜ் (வயது 48). இவர் தனியார் ஆம்னி பஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். அவர் அண்ணாநகர் 4-வது தெருவில் வந்து கொண்டு இருந்த போது, களியக்காவிளையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மாரிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com