

சென்னை,
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் விளையாட்டான ஜிடிஏ (GTA 6) வீடியோ கேம் நாளை வெளியாக உள்ளது.
ஜிடிஏ கேம் விளையாடுவதற்காக INDE என்ற தனியார் நிறுவனம், தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் என அனைவர்க்கும் விடுமுறை அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிஷோர் சண்முகம் இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருப்பதாவது;
நாங்கள் 'வைஸ் சிட்டி', 'ஜிடிஏவி' என யதார்த்தத்தையே மறையச் செய்யும் 'ராக்ஸ்டார்' உலகங்களுடன் வளர்ந்தோம். 13 ஆண்டுகள் ஆகிவிட்டன, எனவே ஜிடிஏ 6 இறுதியாக வரும்போது, நாங்கள் அதை மற்றுமொரு சாதாரண வியாழக்கிழமையாக கருதப் போவதில்லை! அன்று நிறுவனமே அதிகாரப்பூர்வமாக விடுமுறை எடுக்கிறது!" என தெரிவித்துள்ளார்.