மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன மேலாளர் பலி

வேலகவுண்டம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன மேலாளர் தரைப்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன மேலாளர் பலி
Published on

பரமத்திவேலூர்

தனியார் நிறுவன மேலாளர்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமராஜ். இவரது மகன் ரகுவரன் (வயது 35). இவர் தற்போது நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மறுக்கலாம் பட்டியில் உள்ள ஒரு தனியார் எண்ணெய் மில்லில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் பெரியமணலில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு ரகுவரன் வேலையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வேலகவுண்டம்பட்டியில் இருந்து பெரியமணலி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கொட்டாம்பட்டி அருகில் புதிதாக தரைப்பாலம் அமைக்கும் பணிக்கான வேலை நடந்து வரும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

சாவு

இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு புதிதாக அமைத்து வரும் தரைப்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தார். இதில் ரகுவரனுக்கு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரகுவரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com