தனியார் நிறுவன மேலாளர் மர்ம சாவு

தர்மபுரி தங்கும் விடுதியில் தனியார் நிறுவன மேலாளர் மர்மாக இறந்து கிடந்தார்.
தனியார் நிறுவன மேலாளர் மர்ம சாவு
Published on: 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பீட்டர் பிரான்சிஸ் (வயது 50). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் குழாய் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வியாபாரம் தொடர்பாக அவர் தர்மபுரிக்கு வந்தார். அங்கு ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது பீட்டர் பிரான்சிஸ் கட்டிலில் மர்மமாக இறந்து கிடந்தார். இதுபற்றி தர்மபுரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பீட்டர் பிரான்சிஸ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்மமான முறையில் இறந்தாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com