திருத்தணியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) திருத்தணியில் உள்ள ஜி.ஆர்.டி.பொறியியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
திருத்தணியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
Published on

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசு, ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) திருத்தணியில் உள்ள ஜி.ஆர்.டி.பொறியியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலை நாடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்நிலையில் நேற்று திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன் திருத்தணி ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடம் நாளை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள துண்டு பிரசுரங்களை கொடுத்து அழைப்பு விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com