

சென்னை,
சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் நடந்த கட்டிட பணியின்பொழுது தூண் மற்றும் சாரம் சரிந்து விழுந்துள்ளது.
இதில் சாரம் சரிந்து கொட்டகை மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் கொட்டகையின் கீழ் இருந்த 35 தொழிலாளர்கள் சிக்கி கொண்டு உள்ளனர். அவர்களில் 17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். 3 பேரின் நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது. இந்த சம்பவத்தில் வீடு ஒன்றும் சேதமடைந்து உள்ளது.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு 8 ஆம்புலன்சுகள் மற்றும் 3 தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.