அடுத்த மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி

கோப்புப்படம்
பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.
இதன்படி சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக பஸ் சேவை தேவைப்படுவதால் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story