குலசேகரப்பட்டினத்திலிருந்து தனியார் ராக்கெட் ஏவ திட்டம்; மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேரப்பட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சென்னை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சிறிய வகை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் ஏவுகிறது. இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பதிலாக, தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேரப்பட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
2026-2027-ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.985.96 கோடியாகும். இதில் ரூ.389.58 கோடி செலவிடப்பட்டுள்ளது. இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுடன், தனியார் நிறுவன ராக்கெட்டுகளையும் இந்த ஏவுதளத்திலிருந்து செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணைமந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






