10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேல்நாறியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சுரேஷ் என்பவர் சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியில் இருந்து விலகிய அவர் அதே பள்ளியில் படித்த பத்தாம் வகுப்பு மாணவி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து அவரது வீட்டிற்கு சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அந்த மாணவி இது குறித்து அவரது தந்தையிடம் கூறிய நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com