தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
Published on

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் பயனடையும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) கச்சேரிசாலையில் உள்ள யூனியன் கிளப் வளாகத்தில் நடக்கிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மையம், மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் சேவை சங்கங்கள் இணைந்து முகாமை நடத்துகின்றனர். இதில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2, டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் பட்டப்படிப்பு படித்து வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களுடைய சுயவிவர அறிக்கை (பயோ டேட்டா), கல்விச்சான்று, ஆதார்கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன்அனுபவம் ஏதேனும் இருப்பின் அதற்கான சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com