காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - நாளை நடக்கிறது

காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - நாளை நடக்கிறது
Published on

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வை நடத்த உள்ளனர். அப்போது பட்டதாரிகள் (பி.இ.உள்பட), டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12-வது மற்றும் 10-ம் வகுப்பு படித்தவர்கள், தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com