திருவண்ணாமலையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
திருவண்ணாமலையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
Published on

திருவண்ணாமலையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

திருவண்ணாமலையில் தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் நடக்கிறது. முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 250-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலைநாடுனர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேவைய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கெண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com